செய்தி:
“தொட்டால் திருப்பி அடிப்போம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் ஆவேசம்.
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இதுவரை பல்வேறு சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசிய பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தொடர்ந்து ஊடகங்களுக்குத் தீனி போட்டபடியே இருந்தார்.
அதற்கு பிறகு, தற்போது அதே பாணியில் பதவிக்கு வந்திருக்கிற தாகூரும் முதலடியே இப்படி அதிரடியாகக் கொடுத்திருக்கிறார்.
சூழலுக்கேற்ப காங்கிரஸும் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் போலிருக்கிறது.