ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கிறது. அதிலும் நாவல் பழத்தின் மருத்துவ குணம் மகத்தானவை.
நாவல் பழம் மட்டுமல்ல… நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
முன்னோர் காலத்தில் கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் நாவல் பழம். கோடைக் காலங்களில் நமக்கு கிடைக்கும் மிக முக்கிய பழங்களில் இவையும் ஒன்று.
இன்று மருத்துவர்களே பாராட்டும் ஒரு சிறந்த பழமாக நாவல் பழம் விளங்குகிறது.
சர்க்கரை வியாதி முதல் இதயப் பிரச்சனை உள்பட உடல் எடை குறைக்கவும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் என, ஒரே பழத்தில் பல விதமான நன்மைகள் உள்ளன.
ஆனால், அதை அதிகமாக உட்கொண்டால் சில பாதிப்புகளும் ஏற்படலாம்.
இதில் யாரெல்லாம் இந்த நாவல் பழத்தை சாப்பிடலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
நாவல் பழத்தின் முக்கிய சிறப்பு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ஜம்போலின்’ மற்றும் ‘ஜம்போசின்’ இருக்கிறது. இதன் விதைகளும் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி சளி, காய்ச்சல், தொற்றுநோய்கள் வந்தால் நாவல் பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால் நோய்களை எதிர்த்து போராட உதவும். குறிப்பாக மழைக்காலங்களில் நமது உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த தேர்வு. ஏனென்றால் இதில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
இதனால் அதிக நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். அதிகமாக உட்கொள்ளும் துரித உணவுகளை குறைக்கவும் உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க இது மட்டுமே போதாது உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையும் முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் இதயநோய் சிறியவர்களுக்கும் அதிகமாக பாதிக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இரத்த நாளங்களை பாதுகாக்கிறது.
செரிமானம் தொடர்பான பிரச்சனைக்கு நாவல் பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது.
இதன் சாறு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கவும், சுருக்கங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
- நாவல் பழத்தை வெறும் வயிற்றில் அதிகமாக சாப்பிடக் கூடாது.
- அளவோடு மட்டுமே உண்ண வேண்டும்.
- பழம் சாப்பிட்டவுடன் உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
– வைஷ்ணவி பாலு