செய்தி:
வலுவூட்டப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தி.
– நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
கோவிந்த் கமெண்ட்:
வலுவான இளைஞர்களின் மூலம் பிரதமர் மோடி சொல்வது மாதிரி இந்தியா வலுவாக மாறலாம் தான். ஆனால், இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்?
வேலையின்மையால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பரிதவிக்கும்போது, அவர்களுக்கு கரப்பான் பூச்சி என்கின்ற அடைமொழியைக் கொடுக்கிறார்.
அந்தக் கரப்பான் பூச்சிகள் வலுவாக ஒன்று சேர்ந்தால், அதற்கு தடைவிதிக்கிறார்.
மேற்காசியப் போரினால் மேலும் மேலும் வேலைகளை இழந்து வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் வலு என்ற சொல்லுக்கு பாஜகவின் தேசிய அகராதியில் என்ன தான் அர்த்தம்?