வாக்களித்த மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பேரறிஞர் அண்ணா

1967-ம் ஆண்டு.

தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக திருப்பிய தேர்தல் முடிவு வெளிவந்து, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அண்ணா.

அப்போது, தலைமைச் செயலகத்தில், நுழைந்து முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு அங்கிருந்த ஊழியர்களுக்கிடையே அண்ணா, அன்றைக்குப் பேசிய பேச்சு:

“நாம் இன்றைக்கு பெரும் வெற்றியைப் பெற்று பதவிக்கு வந்திருந்தாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். இன்றைக்கே நமக்கு வாக்களித்த மக்களின் பத்து சதவீதம் பேர், நம்மீது நம்பிக்கை இழக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

“பதவி வரும்போது, பணிவு வர வேண்டும் தோழா…!” என்கிற மக்கள் திலகத்தின் பாடலுக்கான அர்த்தத்தைப் போல அமைந்திருக்கிறது பேரறிஞர் அண்ணாவின் எதார்த்தமான இந்தப் பேச்சு.

 
Comments (0)
Add Comment