செய்தி:
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி ரத்து.
– அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே பல உலக நாடுகள் விஷயத்தில் தாறுமாறான வரியைத் தீர்மானித்து வந்த ட்ரம்புக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீதம் இருந்த 10 சதவீத வரியும் விலக்கப்பட்டிருக்கிறது.
இது இந்தியாவிலிருந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி பண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அடுத்து இதையடுத்து ட்ரம்ப் என்ன செய்வார் என்பதை இப்போதைய நிலையில் கணிக்க முடியாது.