ராபர்ட் பூட்:  இந்தியப் பழங்கால வரலாற்றின் தந்தை!

ஒரு காலத்தில் இந்தியாவை மனித இனத்தின் அசலான வீடு என்ற அழைத்த புவியியலாளரை நாம் மறந்துவிட்டோம்.

தமிழ்நாட்டின் குடியம் குகைகள் முதல் பல்லாரி, சிக்மகளூர் முழுவதும் ஏராளமான பழைய கற்காலத்தைச் சேர்ந்த இடங்களைக் கண்டறிந்ததந் மூலம் தென்னிந்தியாவின் அறியப்படாத மிகப் பழங்கால வரலாற்றைக் கண்டுபிடித்தார்.

1858 ஆம் ஆண்டில் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் பணியாற்றிய ஹென்றி ஜியோகேஹன், திருச்சி பகுதிகளின் பாறைகளில் ஆய்வு செய்தபோது சன்ஸ்ட்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் 24 வயதான ராபர்ட் புரூஸ் பூட்.  அவரது சகாக்களைப் போலவே, ராபர் பூட்டின் வேலையும் பிரிட்டிஷ் மகுடத்திற்கு உதவக்கூடிய விலைமதிப்பற்ற உலோகங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகும்.

இளைய ராபர்ட், ஒருநாள் இந்திய புராதன வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவில்லை.

இங்கிலாந்து நாட்டின் செல்டென்ஹாமில் செப்டம்பர் 22, 1834இல் பிறந்த பூட், திருச்சியின் பாறை நிலப்பரப்புகளை ஆய்வு செய்தும், கிண்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரைகளை வழங்கியும் தனது நாட்களை செலவழித்தார்.

பிரசிடென்சி கல்லூரியில் மொழியியல், தமிழ் மற்றும் தெலுங்கு இலக்கியங்களைக் கற்பிப்பதற்காக கிறித்துவ மிஷனரி பணிகளைக் கைவிட்ட ஒரு சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த பாதிரியார் பீட்டர் பெர்சிவலைச் சந்தித்தார்.

இருவருக்குமிடையே நட்பு மலர்ந்தது. 1862 ஆம் ஆண்டில் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆனியை வாழ்க்கைத் துணையாக ஏற்றார் பூட்.

ராபர்ட் பூட்டின் மிக முக்கியமான திருப்புமுனை நிகழ்வு 1863 மே மாதம் நடந்தது. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தற்தெயலாக விசித்திரமான ஒரு கல் கருவியைக் கண்டெடுத்தார்.

அது கையால் செய்யப்பட்ட கோடரியைப்போல இருந்தது. பின்னர் அந்தக் கல் கருவியை பரிசோதனை செய்வதற்காக லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கற்காலத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டது. 

தனது மனித வரலாறுகள் குறித்த கண்டறிதல்களை நெருங்கிய நண்பரும் சகஊழியருமான வில்லியம் கிங் ஜூனியருடன் பகிர்ந்துகொண்டார்.

இருவரும் சேர்ந்து அதேபோன்ற கலைப் பொருட்களை சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூருக்கு அருகிலுள்ள அதிரம்பாக்கம் என்ற கிராமத்தில் கண்டறிந்தனர். 

பிறகு அவர், மீண்டும் பல்லவரத்திற்குச் சென்றார். 1864 ஜனவரியில் அந்தப் பகுதியில்  பழைய கற்காலத்தைச் சேர்ந்த இரு கருவிகளைக் கண்டெடுத்தார். 

ஐரோப்பிய மத அறிஞர்கள் நிர்ணயித்திருந்த 6 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் என்ற பூமியின் வயது குறித்த கூற்றுகளை, ராபர்ட் பூட்டின் கண்டுபிடிப்புகள் நிராகரித்தன.

மேலும், சார்லஸ் டார்வின் இயற்கையான தேர்வுக் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார். தனது இயற்கைத் தேர்வு பற்றிய கருத்துக்களை “இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலில் முன்வைத்தார்.

கடவுள் மனிதனை உருவாக்கவில்லை, பல நூற்றாண்டுகளா மனிதன் பரிணாமம் அடைந்துவந்திருக்கிறான் என்பதுதான் அது.

தனது ஆய்வுகளின் முடிவுகளை இந்திய புவியியல் ஆய்வாளரான தாமஸ் ஓல்ட்ஹாமிடம் சமர்ப்பித்தார் பூட்.

ஆனால், அது குறித்து பகிரங்கமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

“தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல் கருவிகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அதேபோல ஐரோப்பியன் பல்வேறு பகுதிகளிலும் கண்டுபிடிக்க கல் கருவிகளைப் போலவே அவை இருந்தன.

இவையெல்லாம் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புவியியல், இனவியல் மற்றும் தொல்லியல் மாணவர்களை உற்சாகப்படுத்தத் தவறவில்லை.

கடந்த டிசம்பரில் வங்காள ஆசிய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களின் பொதுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட ஒரு சுருக்கமான வாய்மொழிக் குறிப்பைத் தவிர,

ஜியலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் கண்காணிப்பாளர் டாக்டர் ஓல்ட்ஹாம் அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை”

– என 1865 ஆண்டில் வெளியான “On the Occurrence of Stone Implements in Lateritic Formations in Various Parts of Madras and North Arcot Districts” என்ற நூலில் குறிப்பிட்டார்.

தனது தொல்லியல் ஆய்வின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து ராபர்ட் பூட், தென்னிந்தியா முழுவதும் 53,000 கிலோ மீட்டர் தூரம் குதிரை சவாரி மூலம் பயணம் மேற்கொண்டார்ய பழங்கற்காலக் கருவிகள் பெல்லார், சிக்மகளூர் மற்றும் தமிழகத்தின் குடியம் குகைகளில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது தொல்லியல் கண்டுபிடிப்புகளை 2011 ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு மறுமதிப்பீடு செய்தது.  

அவை 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதிப்படுத்தியது. 

ராபர்ட் பூட்டின் ஆய்வுகளை மதிப்பீடு செய்த சர்மா சென்டர் பார் ஹெரிடேஜ் பவுண்டேசன் நிறுவனத்தைச் சேர்ந்த சாந்தி பப்பு,

“பூட்டின் எழுத்துக்கள் தொல்லியல் பற்றிய அவரது விஞ்ஞான செயல்முறை, கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்  பரந்த பன்முக அணுகுமுறை, கடந்தகால  மற்றும் நிகழ்காலத்தைய நிலம் மற்றும் மக்கள் மீதான ஆழ்ந்த அன்பை தெளிவுபடுத்துகின்றன.

அவரது பழங்கற்கால  வரலாற்றுக்கு முந்தைய கண்டுபிடிப்புகளைப் பொருத்தவரை, மதம், படைப்புவாதம் அல்லது இனம் குறித்து எந்த கேள்வியும் எழவில்லை.

ஐரோப்பாவில் பழங்கற்கால கலைப்பொருட்களின் சமகால மற்றும் முந்தைய கண்டுபிடிப்புகளின் காரணமாக, தனது கண்டுபிடிப்புகளில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்ட கல் கருவிகள் பழங்கற்கால மக்களின் உருவாக்கங்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

சார்லஸ் டார்வின், ஜான் எவன்ஸ் மற்றும் புவியியலாளர் சார்லஸ் லைல் போன்றவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளின் முன்மாதிரிகளை பூட் பின்பற்றினார்.

எங்களால் செய்யப்படும் தற்போதைய ஆராய்ச்சிகள், அவருடைய அவதானிப்புகள் மிகவும் ஆழமானவை என்பதை நிரூபிக்கின்றன.

1884 ஆம் ஆண்டில், தனது மூத்த மகன் ஹென்றியுடன் இணைந்து ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள பில்லாசர்கம்  குகை வளாகத்திற்குள் பழங்கற்கால கலைப்பொருட்களைக் கண்டுபிடித்தார். 

இந்த ஆய்வறிக்கையின்படி, பூட்டின் குறிப்புகள் எந்தவொரு இந்திய குகை அமைப்பையும் பற்றிய தொல்பொருள் மற்றும் பழங்கால சுற்றுச்சூழல் ஆய்வுகளின் மிக நீண்ட பதிவுகளைக் கொண்டுள்ளன” என்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலான தொல்லியல் பணிகளுக்குப் பிறகு, ராபர்ட் பூட் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். 

அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பரோடாவில் பணிபுரிந்த பின்னர், மைசூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் அங்கே  மைசூர் தொல்லிய்ல் அமைப்பு உருவாக்கினார். இது பல வரலாற்று கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. 

பிரிட்டிஷ் புவியியலாளரும் தொல்பொருள் ஆய்வாளருமான ராபர் பூட், தனது நேரத்தை தமிழகத்தில் குடும்பத்திற்காகவும் கர்நாடகாவில் தொல்லியல் ஆய்வுகளுக்காகவும் செலவிட்டார்.

ஹம்பி, ஹோஸ்பேட் மற்றும் துங்கபத்ரா பள்ளத்தாக்கில் ஆய்வுகளில் ஈடுபட்டார். நாற்பது ஆண்டுகால ஆய்வுப்பணியில் 459 பழங்கற்காலப் பகுதிகளைக் கண்டறிந்தார்.

ராபர்ட் பூட்டின் யாராலும் தவிர்க்க முடியாத பங்களிப்பு இதுதான்:  1904 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 4 ஆயிரம் கலைப்பொருட்களை சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு 33 ஆயிரம் ரூபாய் விலைக்குக் கொடுத்தார்.

ஆம், அவர் தனது தொல்லியல் கண்டுபிடிப்புகளி்ன் மூலம் பணம் சம்பாதித்தார். இந்திய வரலாற்றைக் குறிக்கும் முக்கியமான கூறுகள், இந்த மண்ணிலேயே இருப்பதை நிரூபித்தவர் அவரே.

மண்ணில் புதையுண்டிருந்த இந்தியாவின் பழங்கற்கால வரலாற்றைத் தேடிக் கண்டெடுத்த ராபர்ட் பூட், தனது 78 வயதில் 1912 ஆம் ஆண்டு காலமானார்.

ஏற்காட்டில் உள்ள டிரினிடி தேவாலயத்தில் அவரது வழிகாட்டியும் நண்பருமான பெர்சிவலுக்கு அருகில் அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள்:  “I have fought a good fight, I have finished my course, I have kept the faith.”

– தான்யா  

Comments (0)
Add Comment