கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!

செய்தி:

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ்.

– 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி.

கோவிந்த் கமெண்ட்:

பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10 ஆண்டுகளாக நீடித்துவந்தது பிணராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி.

தற்போது, அதற்கும் பிரச்சனை ஏற்பட்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னணியில் காங்கிரஸ் மறுபடியும் கேரளாவில் ஆட்சி அமைத்திருக்கிறது.

பாஜகவின் கிளைகளும் ஆங்காங்கே கேரளத்தில் தென்படுவது வியப்புக்குரிய விஷயம்தான்.

காலம் தான் எவ்வளவு மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது.

Comments (0)
Add Comment