அதிரடியாக, ஆம் ஆத்மியை விட்டு விலகிய 7 எம்பிக்கள்!

செய்தி:

ஆம் ஆத்மியிலிருந்து ஏழு எம்பிக்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு.

என்டிஏ கூட்டணிக்கு விடைக்கொடுத்த அந்த ஏழு எம்பிக்களையும் வரவேற்கிறேன்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான மோதல் நடப்பது, ஒரு தொடர்கதையைப் போல ஆகிவிட்டது.

அதனுடைய ஒரு பகுதியாகத்தான் தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களைவை எம்பிக்களை ஒரே நேரத்தில் பாஜக தன் பக்கம் இழுத்து, மாநிலங்களவையில் தன்னுடைய எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறது.

அதற்கேற்ப தங்களிடம் வந்து சேர்ந்த ஆம் ஆத்மி எம்பிக்களை பாஜக வெகுவாக வரவேற்றிருக்கிறது.

இதெல்லாம் இப்படி 7 எம்பிக்கள் சேர்வதெல்லாம் ஏதோ பாஜகவின் மீதான ஈர்ப்பின் காரணமாக மட்டும்தான், இது நடந்தேறியிருக்கிறதா என்பதை அதை வரவேற்றிருக்கிற பாஜக தான் விளக்க வேண்டும்.

#பாஜக #மாநிலங்களவை #பாஜகஎம்பி #எம்பிக்கள் #மத்தியஅமைச்சர் #கிரண்ரிஜிஜு #இந்தியஅரசியல் #பாராளுமன்றம் #அரசியல்விவாதம் #BJP #RajyaSabha #MPs #KirenRijiju #ParliamentOfIndia #IndianPolitics #AamAadmiParty #AAP #113MPs #7MPs

 
Comments (0)
Add Comment