உச்சநீதிமன்றத்தின் ‘டூ இன் ஒன்’ யோசனை!

செய்தி :   

போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்டு செலுத்தப்படாத அபராதத் தொகையை மின்கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம்.

– உச்சநீதிமன்றம் யோசனை

கோவிந்த் கமெண்ட் : 

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அப்படி அபராதம் கட்டத்தவறியவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் தரச் சான்றிதழ் பெறும்போது, செலுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. இதுதான் தற்போதுள்ள நடைமுறை.

இதை மின்சாரக் கட்டணத்தோடு இணைத்துக் கட்டச் சொன்னால், அதை கட்டுபவர்களுக்கே ஷாக்கடிக்க ஆரம்பித்துவிடும்.

ஏற்கனவே மின்சாரக் கட்டணம் கூடிக்கொண்டிருக்கையில் சராசரி மக்கள், எத்தகைய சுமைகளைத்தான் டூ இன் ஒன்-ஆக தாங்குவார்கள்?

கனம் கோர்ட்டார் அவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

Comments (0)
Add Comment