ஒரு புகழ்பெற்ற சீனப் பழமொழி உண்டு.
‘புலியின் முதுகில் சவாரி செய்பவன் அதன் வயிற்றில் பயணத்தை முடிக்க வேண்டியிருக்கும்’ என்பதுதான் அந்த பழமொழி.
போர் என்பது ஒருவகையான புலியேறு சவாரிதான். அது வெற்றிகரமாக புலியின் முதுகிலும் முடியலாம். அல்லது வயிற்றிலும் முடியலாம்.
பழங்கால எபிரஸ் நாட்டின் மன்னர் பீர்ரஸ், ஒருமுறை சொன்ன பொன்மொழி புகழ்பெற்றது. பொருள் பொதிந்தது.
‘ரோமானியர்களுக்கு எதிராக இன்னும் ஒரேயொரு போரில் நாம் வெற்றி பெற்று விட்டால் அதுபோதும் நாம் அழிவதற்கு(!)’ என்றார் பீர்ரஸ்.
அந்த அளவுக்கு ரோமானியர்களுக்கு எதிரான போரில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் வெற்றிகளையே எபிரஸ் நாடு பெற்று வந்தது.
அந்த ஆதங்கத்தில் மன்னர் பீர்ரஸ் உதிர்த்த பொன்மொழிதான் மேலே கண்டது.
ஈரானுக்கு இந்த பொன்மொழி தற்போது சரியாகப் பொருந்தும். இழப்புகள் இல்லாத வெற்றிகளை பெற்று, சரியான நேரத்தில் ஈரான் போரை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புவோமாக.
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுவோமாக.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு