செய்தி:
போர் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்; ஈரானை கற்காலத்துக்கு மாற்றும் வகையில் சரமாரி தாக்குதல் நடத்துவோம்!
– அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே இதுவரை ஏறத்தாழ ஒரு மாத காலத்திய மேற்காசியப் போரின் விளைவுகளையே மற்ற நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அந்த அளவுக்கு சாதாரண எளிய மக்கள் இந்த போரினால் வெளிப்படையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நடைமுறையாக இருக்கிறது.
ஈரானில் துவங்கிய போர் பல நாடுகளில் வசிக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதே உண்மையாக இருக்கையில், ட்ரம்பின் கற்காலத்திய பேச்சு உண்மையிலேயே கற்காலத்திய அணுகுமுறையாகத்தான் தெரிகிறது.
ஆயுதங்களில் மட்டும் நவீனப்பட்டால் போதாது, சிந்தனையிலும் செயல்முறையிலும் அமெரிக்கா நவீனப்பட வேண்டும் அவ்வளவுதான்.