இல்லத்தரசிகளுக்கான கூப்பனா, அதிமுகவின் பத்தாயிரமா?

செய்தி:

முதியோர் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்வு; வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 8000 கூப்பன்; காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப்படும்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி.

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு, ஃப்ரிட்ஜ் வழங்குவதாகவும் சொல்லி இருந்ததோடு மகளிர் உரிமைத் தொகையும் கூடுதலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் என்பதையே இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் மையப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்கின்றன.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பி.எஸ்.வீரப்பா சொல்வதைப்போல மக்களுக்கான இலவசங்களை அறிவிப்பதிலும் போட்டி நடக்கிறது.

ஆனால், ‘சபாஷ் சரியான போட்டி’ என்றுதான் சொல்ல முடியவில்லை.

Comments (0)
Add Comment