செய்தி:
மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்!
– தேர்தல் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே ஒருவர் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 2000 வழங்குவதாகச் சொல்லி இருக்கிறார்.
இன்னொருவர் முந்திக்கொண்டு 2500 என்று சற்று உயர்த்தியிருக்கிறார்.
இதுவரை, இலவசங்களே கூடாது என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸோ தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை 3000 ஆக உயர்த்தியிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு போட்டோ போட்டி!