செய்தி:
கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்குவதில் அதிமுக – திமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
– நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பிரச்சாரம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை தவெக தலைவரான விஜய் தான் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி இருந்து வருகிறது என்பதை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுக்கு இருதரப்பிலும் பதில் இல்லை.
இப்போது விஜய்யின் உடன்பிறப்பைப் போல, நாம் தமிழர் சீமானும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாக ஒரு முடிச்சைப் பொதுவெளியில் அவிழ்த்திருக்கிறார்.
இதற்கு சம்பந்தப்பட்ட இரு கட்சிகளும் தான் பதில் சொல்ல வேண்டும்.