விலையில்லா ஃபிரிட்ஜ்; அதிமுகவின் வாக்குறுதிகள் எடுபடுமா?

செய்தி:

ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம்; அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலை இல்லா பிரிட்ஜ்!

  • 297 வாக்குறுதிகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.

கோவிந்த் கமெண்ட்:

தன்னைச் சுற்றி இருக்கிற பல கட்சிகளின் புண்ணியத்தில் அதிமுக தற்போது தேர்தலுக்காக வெளியிட்டிருக்கும் வாக்குறுதிகளின் எண்ணிக்கை 297 என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. சென்ற தேர்தலை விட ஒரு மடங்கு அதிகம்.

இந்த வாக்குறுதியில் மாநிலத்தின் நலனைக் காக்கும் ‘மாநில சுயாட்சி’க் குரலும் அடங்கியிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்தும் கூட அவரால் மாநில சுயாட்சிக் குரலை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை இந்த வாக்குறுதி பட்டியலில், எடப்பாடி பழனிசாமியால் முன்னெடுக்க முடிந்திருப்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

அதே சமயம் சாதாரண மக்களுக்கு, முன்பு இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து அதன்படி கொடுக்கவும் செய்ததால் இம்முறை அவரால் அறிவிக்கப்பட்ட இலவச பிரிட்ஜ் வழங்குவதான கிளர்ச்சியான திட்டமும்,

ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உதவித் தொகை பத்தாயிரம் வழங்குவதாகவும், பிறகு படிப்படியாக மாதந்தோறும் ரூ.2000, இன்னும் நீட் தேர்வுக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும்,

பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விலையில்லா பல திட்டங்களை இன்னும் இருக்கிற மிகக் குறைந்த நாட்களுக்குள் எந்த அளவுக்கு அதிமுக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறதோ, அந்தளவுக்கு பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எப்படியோ தேர்தல் அறிக்கை வெளியீட்டில் சற்றே முந்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Comments (0)
Add Comment