எது தூயசக்தி, எது தீயசக்தி?

செய்தி:

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீயசக்தி என்ற ஒரே வார்த்தையைச் சொல்லி காலி செய்தார்கள்.

நான் கூட யோசித்திருக்கிறேன். ஏன் இவ்வளவு கடுமையாக அவர்கள் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.

ஆனால், அவர்கள் சொன்னது சரிதான். இப்போதுதான் புரிகிறது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கூறியதை நானும் ‘ரிபீட்’ செய்கிறேன். திமுக ஒரு தீயசக்தி, தீயசக்தி, தீயசக்தி. அதே நேரம் தவெக தூயசக்தி.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தூயசக்தி தவெகவுக்கும் தீயசக்தி திமுகவுக்கும் இடையே தான் போட்டி. 

– ஈரோட்டில் விஜய் பேசியவை.

கோவிந்த் கமெண்ட்:

பேச்சில் திராவிட மாடலை எதிர்த்தாலும், தனது பேச்சு பாணியில் திராவிட பாணியிலான அடுக்கு மொழிப் பேச்சை விஜய் கைவிட மாட்டார் போலிருக்கிறது.

Comments (0)
Add Comment