தனிமனித சுதந்திரத்தை உணரவைக்கும் நூல்!

நூல் அறிமுகம் :

எழுத்தாளர் சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளில் தனிமனித சுதந்திரம், கொள்கைப் பிடிப்பு, எதிலும் சனநாயகத்தன்மை, சுயமரியாதை, நேர்த்தி, ஒழுங்கு, ஒரு மதிப்பீட்டில் உறுதியாக நடப்பது, எதிராளியை வாதத்தால் முற்றுகையிடும் திறமை… எல்லாம் தூக்கலாக இருக்கின்றன.

ஆனால், அவரது சிறுகதைப் புனைவுகளில் சித்திரமாகியுள்ள கதாபாத்திரங்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். தரக்கட்டுப்பாட்டில் அவர்கள் நீக்குப்போக்கானவர்கள்; மானிடராய் வாழ்கிறவர்கள்.

அவர்களிடம் மாந்த உறவுகள் மேனிலை பெற்றுள்ளதால் அறம் பின்னணிக்குள் தள்ளப்படுகிறது. அதனால் கருத்துச் சர்வாதிகாரம் இல்லை. பாத்திரங்களின் பலவீனங்கள் தரத்தை வென்றுவிடுகின்றன.

ஆனால், புனைவற்ற நடைமுறை அனுபவரீதியான வாழ்க்கையில், இவை குறித்த சு.ரா.வுடைய கட்டுரைகளில் நேர்மாறான தருக்கங்கள் செயல்படுகின்றன.

சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் அதிகமாகப் பேசிய பொருள்கள்:

வாழ்க்கை மற்றும் இலக்கியத்தின் தரம், தரத்தின் சீரழிவு, வணிகமயம், இயக்கம், கொள்கை, சாதிமயம், அரசியல் சீரழிவு.

சாரமின்மை, பள்ளிப்படிப்பின் பயன் இன்மை, தமது உடல்நோய், கிறிஸ்தவம்-இஸ்லாமியம் குறைபாடுகள்.

திராவிட கலாச்சாரத்தில் பிராமண வெறுப்பு, பொதுவுடைமை இயக்கத்தின் சர்வாதிகாரம், மரபு ஒரு சுமை, வணிகமயம், எதார்த்தவாதம், புனைவியம், நவீனத்துவம் முதலான இலக்கியச் செல்நெறிகள்… என விரிவாக அமையப் பெற்ற விமர்சன மதிப்பீட்டு நூல்.

******

நூல்: சுந்தர ராமசாமி – கருத்தும் கலையும்! 
ஆசிரியர்: ராஜ் கெளதமன்
அடையாளம் பதிப்பகம்
பக்கங்கள்: 289

விலை: ரூ. 270/-

Comments (0)
Add Comment