சென்னை டு டெல்லி: தம்பிகளின் புதுப்பயணங்கள்!

தம்பி 1:

செய்தியாளர் கேள்வி: எங்கப் போறீங்க?

இ.பி.எஸ். தம்பி: நான் டெல்லிக்கு போறேன்.

செய்தியாளர் கேள்வி: டெல்லிக்கு எதுக்குப் போறீங்க?

இ.பி.எஸ். தம்பி: டெல்லிக்கு எங்க கட்சி ஆபீசுக்குப் போறேன்.

செய்தியாளர் கேள்வி: ஆனா, சொன்னபடி நீங்க கட்சி ஆபீஸ்க்கு போகல போலிருக்கே?

இ.பி.எஸ். தம்பி: கார்ல ஏறும்போது கட்சி ஆபீஸ்ன்னு சொன்னாங்க. ஆனா, பாஜக கட்சி ஆபீசுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க.

செய்தியாளர் கேள்வி: இந்த முறையாவது நேரடியா உங்கக் கட்சி ஆபீசுக்குப் போவீங்களா?  இல்லனா, பாஜக ஆபிசுக்குப் போவீங்களா?

இ.பி.எஸ். தம்பி: இல்லை இப்ப கண்ணு நல்லா தெரியுது. நேரா பாஜக ஆபீசுக்குத் தான் போறேன்.

*****

தம்பி 2:

செய்தியாளர் கேள்வி: தம்பி செ.கோ. எங்க போறீங்க?

செ.கோ. தம்பி: நான் ஹரித்துவார் போறேன்.

செய்தியாளர் கேள்வி: ஆனா, நீங்க ஹரித்துவாருக்கு போகல போலிருக்கே?

செ.கோ.தம்பி: ஹரித்துவார் போறதுக்கு தான் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். ஆனா, விமானம் டெல்லிக்குப் போயிடுச்சு. நான் என்ன செய்யட்டும்?

செய்தியாளர் கேள்வி: நீங்களாவது கரெக்டா டிக்கெட் வாங்கி சரியான இடத்துக்குப் போவீங்களா?

செ.கோ.தம்பி: கனத்த மவுனம்.

****

தம்பி 3:

செய்தியாளர் கேள்வி: ஓபிஎஸ் தம்பி எங்க போறீங்க?

ஓபிஎஸ்.தம்பி: முன்பெல்லாம் அடிக்கடி டெல்லிக்குக் கூப்பிடுவாங்க. நானும் போய் இருக்கேன்.

செய்தியாளர் கேள்வி: இப்போ டெல்லிக்குக் கூப்பிடலையா என்னாச்சு?

ஓபிஎஸ்.தம்பி: செலக்ட் அம்னிசியா மாதிரி, ஏதோ ஒன்னு அட்டாக் ஆகி, டெல்லி பேரே எனக்கு மறந்து போச்சு.

செய்தியாளர்: கனத்த மௌனம்

  • லியோ
Comments (0)
Add Comment