நேற்று இலங்கை; இன்று நேபாளம்!

பெரும் இனக்கலவரத்தையே உருவாக்கி தமிழினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு நேரெதிராக அவர்கள் சொந்தம் கொண்டாடி வந்த மக்களே அதிபர் வீட்டு வாயிலை முற்றுகையிட்டு, பெரும் கிளர்ச்சியை நடத்தி அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை நாம் அறிவோம்.

தற்போது அதே விதமான நெருக்கடி நேபாளத்திலும் உருவாகியிருக்கிறது. பெரும் கிளர்ச்சி உருவாகி நேபாள பிரதமரான சர்மா ஒலி ராஜினாமா செய்யும் அளவிற்கு ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 

மேலே குறிப்பிட்ட இரண்டு நாடுகளுமே மதநெறிகளை முன்னிலைப்படுத்தக் கூடிய முன்னிலைப்படுத்தக் கூடிய நாடுகள் தான். ஆனாலும், ஆட்சியாளர்கள் மக்கள் மீது காட்டிய ஒடுக்குமுறை அவர்களை கிளர்ந்தெழுந்து போராட வைத்திருக்கிறது. 

வெறும் மத நம்பிக்கையை மட்டும் முன்னிறுத்தி ஆட்சியாளர்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளையும், அதிகாரங்களையும் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை இந்த கிளர்ச்சிகள் உணர்த்துகின்றன.

கடுமையான ஒடுக்குமுறை மூலம் மக்களை திசைத் திருப்பியோ, மழுங்கடித்தோ மக்களை தங்கள் வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று மிதமிஞ்சிய உணர்வோடு நடந்துகொள்ளும் எந்த ஒரு ஆட்சியாளர்களுக்கும் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் ஓர் பாடம்தான். 

– யூகி

Comments (0)
Add Comment