காங்கிரஸ் புகாருக்குத் தேர்தல் ஆணையம் மறுப்பு!

செய்தி:

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பீகாரைச் சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற காங்கிரஸ் கட்சியின் புகாரைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

கோவிந்த் கமெண்ட்:

பீகாரைச் சேரந்த ஆறரை லட்சம் பேரைப் பற்றி மட்டும் காங்கிரஸ் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது.

இன்னும் தமிழ்நாட்டில் வடமாநிலங்களிலிருந்து, குறிப்பாக எட்டு மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் வேலை செய்கிறவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் சேர வாய்ப்பிருக்கிறதே.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பேசும் மத்திய அரசு இத்தகைய புகார்களை எப்படி எதிர்கொள்ளும்?

 

Comments (0)
Add Comment