போதைப் பொருள் வழக்கில் ஏன் இவ்வளவு தடுமாற்றங்கள்?

உயர் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் மற்றவர்களுக்கு விநியோகித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு கைதாகினார்கள்.

அவர்களோடு வேறு சிலரும் கைது செய்யப்பட்டார்கள். 

அந்தப் பிரச்சனை மூன்று, நான்கு நாட்களாக வெவ்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டே இருந்தது.

பொதுவாக போதைப் பொருள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுகிறவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுவதில்லை. 

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிலிருந்து தற்போது புழங்கும் அதிநவீன ரகமான, அதிக விலையுள்ள போதைப் பொருட்கள் வரை இதே விதிகள் பொருந்தும்.

ஆனால், நடிகர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், முதலில் ஜாமீன் மறுக்கப்பட்டு மறு வாரமே அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளிக்கப்பட்டது.

 கைது செய்யப்பட்ட நடிகர்களை அடுத்து, பிரபலமான நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என்ற வியூகங்கள் வெளிவந்தநிலையில்தான் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.

தற்போது, இன்றைய நாளிதழ்களில் நடிகர்கள் கைதான போதைப்பொருள் வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில், பணம் கைமாறியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கிரைம் சினிமாவைப் போல நடிகர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில்தான் எத்தனை டுவிஸ்ட்கள்?

எப்படியெல்லாம் லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக, செய்திகள் வெளிவருகின்றன. கைதான அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அந்த நடிகர்கள் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள்? யார் யாரையெல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள்? 

இந்தத் தகவல்களையெல்லாம், வெளியே கசியாத நிலையில்தான் இதே வழக்கில் புகாருக்குமேல் புகாராக அளிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

போதைப் பொருள் வழக்கிலேயே ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

– யூகி

Comments (0)
Add Comment