கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் புளூபெர்ரி!

ஜூலை 8: தேசிய புளூபெர்ரி தினம்

இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பழங்கள் எல்லாம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்டவைதான்.

பொதுவாக சீசனுக்கு ஏற்றதுபோல் விளையக்கூடிய ஒவ்வொன்றும் தனித்தனியான வடிவமும், சுவைகளையும் கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் தனிப்பட்ட சத்துக்களையும் கொண்டிருப்பவை.

அந்த வகையில் பெர்ரி பழங்கள் சிறந்த நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. பெர்ரி பல வகைகள் இருந்தாலும் புளூபெர்ரி பழத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு.

இந்தப் பழங்களில் வைட்டமின் கே, நிறைந்திருப்பதால் இதன் மூலப்பொருளான ஆந்தோசயனின் என்ற தாவரக் கலவையானது இந்தப் பழத்திற்கு நீல நிறத்தைக் கொடுக்கிறது.

இதிலிருக்கும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் இவை தமனிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சர்க்கரை நோயின் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் இருக்கும் வைட்டமின் கே, வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியம், வலிமையான எலும்பு, சருமப் பாதுகாப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை சமப்படுத்துதல், புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் குறைக்கப்படுகின்றன.

இந்த புளூபெர்ரி பல விதமான உணவுகளில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புளூபெர்ரி மஃபின்கள், ஸ்கோன்கள், ஸ்மூத்தீஸ், பிரஞ்சு டோஸ்ட், புளூபெர்ரி சீஸ் கேக், புளூபெர்ரி பை, புளூபெர்ரி க்ரம்ப் மஃபின்.

புளூபெர்ரி சாஸ், புளூபெர்ரி ஜாம், புளூபெர்ரி மில்க் ஷேக், புளூபெர்ரி சாலட், புளூபெர்ரி ஜூஸ், புளூபெர்ரி டீ என்று அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படி பல நன்மைகளை கொண்ட புளூபெர்ரி இன் பெருமையை கூறும் விதமாக

ஸ்மூத்தீஸ், பிரஞ்சு டோஸ்ட், புளூபெர்ரி சீஸ் கேக், புளூபெர்ரி பை, புளுபெர்ரி க்ரம்ப் மஃபின்,

சாஸ், ஜாம், மில்க் ஷேக், சாலட், ஜூஸ், டீ என்று புளூபெர்ரியில் செய்யும் பொருட்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி பல நன்மைகளைக் கொண்ட புளுபெர்ரியின் பெருமையைக் கூறும் விதமாக ஜூலை 8 ஆம் தேதி தேசிய புளூபெர்ரி தினம் கொண்டாடப்படுகிறது.

புளூபெர்ரிகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதற்காக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுவையான புளூபெர்ரிகளில் ஊட்டச்சத்து நிறைந்த, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த இருக்கக்கூடிய பழங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சோர்வாக இருக்கும் நமது உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை கொடுக்க கூடிய பானமாகவும் இருக்கிறது.

தேசிய புளுபெர்ரி தினத்தின் வரலாறு

புளூபெர்ரிகளின் பூர்வீகம் என்று பார்த்தால் வட அமெரிக்கா. எப்போதும் செழித்து வளரக்கூடியவை. வற்றாத பூக்கும் தாவரங்களில் இதுவும் ஒன்று. இந்த பெர்ரியின் நிறம் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு இடையில் மாறுபாட்டுடன் இருக்கும்.

பெரும்பாலும் இவை அடர்ந்த காடுகளில்தான் முதலில் கிடைத்தது. அதன் பிறகு 1900-களில் மக்கள் காடுகளில் இருந்து பறித்து பயன்படுத்தினர்.

அதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் மாற்று வழியை யோசித்தனர். 13,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பழம் மக்கள் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பூர்வீக அமெரிக்கர்கள் புளூபெர்ரி பழங்களை எல்லாவற்றிலும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

அதிலுள்ள மருத்துவ நன்மைகளைப் புரிந்துகொண்டு, மருந்துப் பொருட்களாகவும், உணவில் சுவையூட்டிகளாகவும் பயன்படுத்துகின்றனர்.

வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் புளுபெர்ரிகளின் தோற்றம் எலிசபெத் ஒயிட் மற்றும் ஃபிரடெரிக் கோவில்லே ஆகியோரிடமிருந்து தொடங்கப்பட்டது. பெர்ரி பழங்களைக் கண்டுபிடித்து அவற்றை தங்கள் பண்ணையில் பயிரிட்டனர்.

அதன் பிறகுதான் நாடு முழுவதும் புளூபெர்ரி என்ற பழம் எல்லோருக்கும் தெரியவந்தது. இதன் மருத்துவப் பயன்கள், சுவைகள் எல்லா இடங்களுக்கும் பரவத் தொடங்கின.

புளுபெர்ரி பழத்தின் நன்மைகள்:

நவநாகரிக வட்டாரத்தில் முதன்மை இடத்தில் புளுபெர்ரி பழங்கள் தற்போது இருக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுவதால் இதன் மவுசு தற்போது அதிகரித்துள்ளது.

தினமும் புளூபெர்ரிகளை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

டிஎன்ஏ சேதத்தைக் கட்டுப்படுத்தி, வயதான தோற்றத்தைtஹ் தடுக்கும் வல்லமை கொண்டது புளூபெர்ரி. புற்றுநோய்க்கு எதிராக செயல்படுதல், மூளைச் செயல்பாடுகளை மேம்படுத்தும் வேலையை பெர்ரிகள் செய்கின்றன.

மேலும் சர்க்கரை நோய்களுக்கு எதிராகச் செயல்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலைப் படுத்துவதாக கூறப்படுகிறது.

உடலை ஃப்ரீ ரேடிக்கல்கள், நிலையற்ற மூலக்கூறுகள், செல்களை சேதப்படுத்தும் பண்பிலிருந்து பாதுகாக்கின்றன.

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றின் பாதிப்பைக் குறைத்து பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் பண்பு ப்ளூபெர்ரி பழத்திற்கு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்தி குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

கண்பார்வையை மேம்படுத்துதல்:

புளுபெர்ரி பழத்தை வாரத்தில் மூன்று நாள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பார்வை மேம்படுவதோடு கண்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் இருக்கும் ஆந்தோசயனின் கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

விழித்திரைக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது.

இதனால் கண்களின் விழித்திரை சேதத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

புளூபெர்ரியைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது இரவு நேரப் பார்வையை மேம்படுவதற்கும், கண் சோர்வைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

வயது முதிர்வால் ஏற்படும் பார்வை இழப்பை, இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புளூபெர்ரியில் இருக்கும் கொலாஜன் பங்கு:

பொதுவாக பெர்ரிக்களில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகம். அது நமது உடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

சருமம், எலும்புகள், தசைகள், தசைநார்கள், குருத்தெலும்பு மற்றும் இரத்த நாளங்கள் போன்ற பல்வேறு உறுப்புகளின் கட்டமைப்பை இந்த கொலாஜன்தான் உருவாக்குகிறது.

ஆகவே, தேசிய புளூபெர்ரி தினமான இன்றிலிருந்து உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் புளூபெர்ரி தேவையான அளவு எடுத்துக்கொண்டு உடலில் கொலாஜன் அளவை அதிகப்படுத்தி இளமையுடனும் இருப்போம்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment