ராக்பெல்லர்… இந்த பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கீங்களா?
யாருங்க அவரு என்கிறீங்களா? அமெரிக்காவோட முதல் மில்லினர் இவர். அந்தக் காலத்தில் உலகப் பெரும் பணக்காரர் இந்த ராக்பெல்லர்தான்.
ஸ்டாண்டர்ட் ஆயில் எண்ணெய் நிறுவனம் மூலமா அந்தக் காலத்திலே 900 மில்லியன் டாலர்களை சம்பாதித்தவர் இவர்.
அவரோட சொத்து மதிப்பு, அமெரிக்க நாட்டோட மொத்த பொருளாதாரத்திலே ஒன்றரை சதவிகிதம்னு சொன்னால் உங்களால நம்ப முடியுதா?
அவ்ளோ பெரிய பணக்காரரா இருந்தவர்தான் ராக்பெல்லர். அவரோட முழுப்பெயர் ஜான் டேவிட்சன் ராக்பெல்லர். சுருக்கமா ஜான் டி ராக்பெல்லர்.
கைநிறைய காசு இருந்ததால், 1915ஆம் வருஷம் ராக்பெல்லர் ஒருவேலை செய்தார். அமெரிக்காவிலே இருக்கிற பல நாளிதழ்கள், வார இதழ்களை தன்னோட கட்டுப்பாட்டில் அவர் கொண்டுவந்தார்.
அதன்மூலமா அமெரிக்க இதழ்கள்ல ராக்பெல்லரை துதிபாடி நிறைய செய்திகள் வர ஆரம்பிச்சுது.
‘ராக்பெல்லர் மட்டும் இல்லைன்னா அமெரிக்கா என்ன கதி ஆகியிருக்கும்’ என்பது மாதிரியான கட்டுரைகள் எல்லாம் அதிகமா வரத் தொடங்குச்சு.
தொழிற்சங்கவாதிகள் எல்லாம் கெட்டவங்க என்கிறது மாதிரி போலி செய்திகளையும் நாளிதழ்கள் வெளியிட ஆரம்பிச்சுது. அவங்களைப் பத்தி தப்பும்தவறுமா பொய்ச் செய்திகள் வெளிவந்தபடியே இருந்துச்சு. காரணம் ராக்பெல்லரோட பணம்.
ஒட்டுமொத்த மீடியாக்களையும் இப்படித் தன்வசம் வச்சிருந்த ராக்பெல்லர், கல்வி, மதம், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக நிறைய பணத்தை வாரி வாரி நன்கொடையாகத் தர்றார் என்கிற பேரும் அந்த காலத்திலே இருந்தது.
ஆனால், ஒரு திட்டத்தோடத்தான் ராக்பெல்லர் இயங்கினார். அவரோட கட்டுப்பாட்டிலே இயங்கின கல்வி நிலையங்கள்ல யாரும் கம்யூனிசம், தொழிலாளர் உரிமை பற்றியெல்லாம் பேசக்கூடாது. மீறிப்பேசினால் கல்தா.
படிச்சு முடிச்ச பிறகுகூட மாணவர்கள் கம்யூனிசம் பத்தியெல்லாம் சிந்திக்கக்கூடாது, பேசக்கூடாது என்கிறதுதான் ராக்பெல்லரோட எண்ணம்.
ராக்பெல்லருக்கு எப்ப சிரமம் வருதோ அப்போதெல்லாம், ‘ராக்பெல்லர் அமெரிக்க நாட்டின் உண்மை குடிமகன், அவருக்குத் தோள் கொடுக்க வேண்டியது அமெரிக்க அரசாங்கத்தோட கடமை’ இப்படியெல்லாம் அவரது ஆதரவு பத்திரிகைகள் எழுதித் தள்ளும்.
ஒட்டுமொத்த ஊடகங்கள், இலக்கிய வியாதிகளை எல்லாம் தன் வசம் வச்சிருந்து தற்போதைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடியா இருந்திருக்கார் ராக்பெல்லர். அவரது புகழ் ஓங்குக!
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு