நாகாலாந்து சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில், திமாப்பூா்-3 மக்களவைத் தொகுதியில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் ஹெக்கானி ஜக்லாவ் களமிறக்கப்பட்டார்.
இவா், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் அஸேடோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.
என்டிபிபி கட்சியை சோ்ந்த சல்ஹெளட்டனுவோ குரூஸ், மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்டார். இவா், சுயேச்சை வேட்பாளரை 7 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதன்மூலம் மாநிலத்தின் முதல் பெண் எம்எல்ஏக்கள் என்ற பெருமையை இவா்கள் பெற்றுள்ளனர்.