மம்தாவுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

செய்தி:

மேற்கு வங்கத் தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல; பாஜகவின் சதி.

– பதவி விலக மாட்டேன் என மம்தா பானர்ஜி பிடிவாதம்.

கோவிந்த் கமெண்ட்:

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பாஜக சதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார் கூறி வந்தார் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி.

ஆனால், தேர்தல் ஆணையமோ, பாஜகவோ அதை சற்றும் பொருட்படுத்தவில்லை.

மம்தா பானர்ஜி சொன்னபடியே தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மீண்டும் தேர்தல் ஆணையம் மின்பதிவு இயந்திரம் மூலமாக சதி செய்து தங்களுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவானதுமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதாக தற்போதும் குற்றஞ்சாட்டி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, தான் முதலமைச்சர் பதவியை விட்டு வெளியேற மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்.

தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன விதமான வெளிப்படையான பதிலை சொல்லும்?

Comments (0)
Add Comment