வெப்பத்தைத் தணிக்கும் சத்தான உணவு!
வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? வழக்கமான அரிசி உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான மற்றும் சுவையான கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் ஒரு மேஜிக் பானம் தான் இந்த குதிரைவாலி மோர்க் கஞ்சி. இது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. குதிரைவாலி மோர்க் கஞ்சியின் மருத்துவ குணங்கள் என்ன: இந்தக் கஞ்சியின் சிறப்பம்சமே அதன் அபரிமிதமான மருத்துவ குணங்கள்தான்: · உடல் எடை குறைப்பு: இதில் நார்ச்சத்து அதிகமாக […]
எல்லோருக்கும் தேவை உற்சாகம் தரும் உடற்பயிற்சி!
உலகில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மனிதரிடமும் உண்டு. நீண்ட வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது நல் ஆரோக்கியம் மட்டுமே. உடலையும் மனதையும் ஒருசேர பராமரிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்க்கை தரத்தினை பெற முடியும். இதற்கு நமக்கு துணை புரிவது உடற்பயிற்சியும் தியான முறைகளும். சில காலம் முன்பு வரை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இதனை மேற்கொண்ட நிலை மாறி, இன்று பெரும்பாலானோரிடம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் நம் […]
தோல் என்னும் பாதுகாப்புக் கேடயம்!
நமது தோல் நமது உடலைப் பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடலின் மிகப்பெரிய மற்றும் அதிக வெளிப்பாடுகளுக்கு உள்ளாகும் உறுப்பு என்பதால், இதற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம். பல்வேறு வகையான பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் கிருமிகளால் தோல் தொற்றுநோய்கள் ஏற்படலாம். லேசான தோல் தொற்றுநோய்களுக்கு எளிதில் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம் என்றாலும், அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். நாம் கவனிக்க வேண்டிய சில பொதுவான தோல் […]
பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவப் பயன்களும்!
மனிதனின் அடிப்படை தேவைகளில் முதலாவதும் உலக இயக்கத்திற்கு முழுமுதற் காரணமாகவும் விளங்குவது உணவு. உடலுக்கு ஆற்றலை வழங்கும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் அதே நேரம், நோய்களிலிருந்து காப்பாற்றும் கேடயமாகவும் இது உள்ளது. ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இவ்வேளையில் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்புவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பல்வேறு ஊட்டச்சத்துக்களை அள்ளித் தந்து நல்வாழ்விற்கு வித்திடும் இவற்றின் மருத்துவப் பயன்களையும் அதிகம் அறியப்படாத, ஆனால், புழக்கத்தில் உள்ளவற்றைப் பற்றியும் அறிவது அவசியம். ‘உணவே மருந்து’ […]
கண்களைப் பாதுகாக்க… 10 நிமிடங்கள் போதும்!
நமக்கு விருப்பமானவர்களை ‘கண்ணு…’ என்று கொஞ்சுவோம். அந்த அளவுக்கு நம் கண்களை நேசிக்கிறோம். அதேவேளை நம்மை அறியாமல் கண்களுக்கு அதிக வேலை கொடுத்து அதை அயர்ச்சியுற வைத்துக் கொண்டிருக்கிறோம். கம்ப்யூட்டர், டிவி, செல்போன் என்று ஒளிரும் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் கண்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. வாழ்க்கை முறையே அப்படி என்றாகிவிட்ட நிலையில், கண்களைக் காக்க சில பயிற்சிகள் மேற்கொள்வது நலம். இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்க்க வேண்டும். கைகள் சூடானதும் அவற்றை வைத்து […]
நலம் காக்கும் நாவல் பழம்!
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கிறது. அதிலும் நாவல் பழத்தின் மருத்துவ குணம் மகத்தானவை. நாவல் பழம் மட்டுமல்ல… நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. முன்னோர் காலத்தில் கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் நாவல் பழம். கோடைக் காலங்களில் நமக்கு கிடைக்கும் மிக முக்கிய பழங்களில் இவையும் ஒன்று. இன்று மருத்துவர்களே பாராட்டும் ஒரு சிறந்த பழமாக நாவல் பழம் விளங்குகிறது. சர்க்கரை வியாதி முதல் இதயப் பிரச்சனை […]