தமிழக அரசியல் சூழலில் வெவ்வேறு கால கட்டங்களில் பொதுவெளியே மிக மோசமானதாக இருந்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி படுகேவலாமான முறையில் பேசுவதை இங்கு எதிர்க்கட்சி நாகரிகமாகவே கையாண்டிருக்கிறார்கள்.
அதிலும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது ஒரு பெண் என்பதால் அவர் சந்தித்த கொச்சையான விமர்சனங்கள் மிகவும் கேவலமானவை. அவற்றை எல்லாம் கடந்து தான் அரசியலில் தான் எதிர்பார்த்த உயரத்தை ஒருவரால் சென்றடைய முடிந்திருக்கிறது.
அதைப் போலவே தவெக என்கின்ற கட்சியை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு விஜய் துவங்கியதில் இருந்தே அவருக்கு எதிரான பல கொச்சையான விமர்சனங்கள் வெளிப்பட்டன.
அவர் நடிகர் என்பதால் அவருடன் நடித்த சில நடிகைகளும் குறிவைத்து கொச்சையாக தாக்கப்பட்டார்கள். பல அசிங்கமான ஊற்றுக் கண்கள் அரசியல் வெளியில் உருவாகின.
விஜய்யை எதிர்த்து திமுக மட்டுமல்ல, பாஜக தலைமை உட்பட பலரும் கொச்சையாக விமர்சித்திருக்கிறார்கள்.
அவரை விமர்சித்தத்தோடு அவரது தாயாரையும் விமர்சித்திருக்கிறார்கள். அவருடைய அமைச்சரவையில் இருந்த பெண்களையும் தாறுமாறாக விமர்சித்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இத்தகைய விமர்சனங்கள் மிகவும் அதிகப்பட்டன. முன்பு தண்ணீர் பற்றிப் பேசியவர்கள் அப்போது பெண்களை அருகில் வைத்துக் கொண்டே மூடு பற்றிப் பேசினார்கள்.
முன்பெல்லாம் மூன்றாம் தரப் பேச்சாளர்களுக்கே உரித்தானதாக சொல்லப்பட்ட கேவலமான பேச்சுக்கள் எல்லாம் தரம் உயர்ந்து முதல் கட்டத் தலைவர்கள் வாயிலிருந்தே வெளிவர ஆரம்பித்துவிட்டன.
சமூகவலைதளங்களில் சில கொச்சையான பேச்சுக்களை மிகக் கொச்சையான வார்த்தைகளைக் கேட்கும்போது கழிப்பறைகளில் எழுதப்படும் வாசகங்களும் மஞ்சள் நிறமும் தான் மனதிற்குள் ஓடுகின்றன.
இந்தளவுக்கு தரம் தாழ்ந்த பதிவுகள் பகிரப்படுவதை எப்படி சைபர் குற்றங்களை கண்காணிப்பதெற்கென்றே ஏ.ஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட அமைப்புகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன்.
மிக அண்மையில் சென்னையில் நடந்த திமுக கூட்டமொன்றில் பேசிய திமுக பெண் கவுன்சிலர் ஒருவர், தமிழக முதல்வரான விஜய் குறித்தூப் பேசிய அனாகரிமான சொற்கள் சமூகவலைதளங்களில் பெரும் வைராலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன.
அதில் மிகவும் கீழ்த்தரமாக முதல்வர் குறித்துப் பேசியிருக்கிற பெண் பேச்சாளர் இன்றைய முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்குமான அழகு பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவர்கள் இறந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் பேசுகிறார்.
இந்த கேவலமான பேச்சுக்கு மேடையிலேயே ரசித்துச் சிரிக்கிறார் சென்னை நகர மேயரான பிரியா.
அதே மேடையில் இருந்த கனிமொழி 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள தனது கட்சியினர் இப்படிப் பேசலாமா என்று வெளிப்படையாகக் கண்டித்திருக்கிறார்.
தமிழகத்தில் பேசுவதற்கு எல்லோருக்கும் தான் சுதந்திரம் இருந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரமும் இருக்கிறது. அதேநேரத்தில் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் பிறரை படு கொச்சையாக ஆபாசமாக பேசுவதை கருத்துச் சுதந்திரம் என்கிற வரையறைக்குள் அடைக்க முடியாது.
இப்படிப்பட்ட அநாகரிகமான பேச்சுக்களை தொடர்ந்து வேடிக்கைப் பாத்துக்கொண்டிருக்கவும் முடியாது.
இத்தகைய வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு உரிய சட்டரீதியான நடவடிக்கையை எந்தவிதமான பாகுபாடுகளையும் மீறி எடுத்தால்தான் பொதுவெளியில் உள்ள கழிவுகளை கொஞ்சமாவது அகற்ற முடியும்.
ஆபாசமாகவே தொடர்ந்து பேசப் பழகிவிட்டவர்கள் தங்களுக்கு முன்னோடியாக சொன்ன பல தலைவர்களின் படங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, லெட்சுமிகாந்தன் போன்றவர்களின் படங்களைத் தேடிப் பிடித்து மாலை அணிவித்துக் கொண்டாடலாம்.
–
#ஆட்சி #எதிர்க்கட்சி #ஜெயலலிதா #தவெக #விஜய் #திமுக #பாஜக #சட்டமன்றம் #இடைத்தேர்தல் #பிரச்சாரம் #பேச்சாளர் #பேச்சு #கருத்துச்சுதந்திரம் #Government #Opposition #Jayalalithaa #TVK #Vijay #DMK #BJP #LegislativeAssembly #ByElection #ElectionCampaign #Speaker #PoliticalSpeech #FreedomOfSpeech #TamilNaduPolitics #PoliticalDebate #Democracy