தமிழகத் தேர்தல் களத்தில் ‘நாய்கள்’ படும் பாடு!

தேர்தல் அரசியலில் நாய்களுடன் சிலரை ஒப்பீடு செய்து பேசப்படுவது அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும், சமீபகாலமாக நாய்களை குறிப்பிட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது.
 
சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த பிறகு அந்தத் தொகுதியில் அவருக்கு வாக்களிக்காத மக்களை “நன்றி மறந்த நாய்கள்” என்று விமர்சிக்கிற அளவிற்கு திமுக சார்பாக பேச வந்தவர்கள் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
 
மிக அண்மையில் நடந்த இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையின் போதும் தவெக சார்பில் பேசிய ஒரு பிரமுகர் நாங்கள் இங்கு ஒரு நாயை நிறுத்தினால்கூட அந்த நாயை ஜெயிக்க வைப்போம் என்கிற அளவுக்கு பேசினார்.
 
இதையடுத்து தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே தான் குறிப்பிட்ட ஒரு கட்சியில் இருந்தபோது எவ்வளவு கோடி ரூபாய் செலவு பண்ணினேன் என்பதையும் இதற்காக கண்ட கண்ட நாய்களை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதையும் கூறி, மறுபடியும் நாய்களை நினைவுபடுத்தியது சமூக வலைத்தளத்துகளில் பெரும் வைரலானது.
 
ஏற்கனவே தெருவில் திரியும் நாய்கள், சிறுவர், சிறுமிகளை விரட்டிக் கொண்டிருக்கையில் அதே நாய்களை அரசியலிலும் சிலர் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
குறைப்பதையும் சில சமயங்களில் கடிப்பதையும் தவிர நாய்கள் என்னதான் செய்துவிட முடியும்?
Comments (0)
Add Comment