பரபரப்பான மேடைப் பேச்சுக்கு பெயர் போனவரான நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவின் பரப்புரைச் செயலாளராக இருந்து வந்தார்.
தவெகவின் நிலைப்பாட்டை ஆதரித்து மேடைகளிலும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வந்த அவர், மிக அண்மைக் காலத்தில் கலந்து கொண்டு பேசிய தொலைக்காட்சி விவாதத்தின்போது பெரும் கலாட்டாவே நடந்து முடிந்திருக்கிறது.
இதையடுத்து தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரை செயலாளரான தனது பெயர் அந்தப் பிரச்சார பட்டியலில் இடம்பெறவில்லை என்கின்ற ஆதங்கத்தோடு இருந்து வந்தார் நாஞ்சில் சம்பத்.
இந்நிலையில், இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தின தினம் ஒரு சமூக வலைதளப் பதிவில், “போனால் போகட்டும் போடா“ என்கிற கண்ணதாசனின் பாடல் வரியை வெளியிட்டிருக்கிறார்.
இது அரசியல் களத்தில் சில விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
தவெகவுக்கு எதிரான கட்சியில் நாஞ்சில் சம்பத்தின் இந்த வரிகள் தமிழக முதல்வரான விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன என்றெல்லாம் கூறினாலும், அதற்கான விளக்கத்தை நேரடியாக நாஞ்சில் சம்பத் இதுவரை அளிக்கவில்லை.
இதுவரை திராவிட இயக்கப் பேச்சாளராக தனது அரசியல் வாழ்வை துவக்கிய நாஞ்சில் சம்பத், மதிமுக, அதிமுக, திமுக அதையடுத்து தவெக என்று பல்வேறு கட்சிகளில் மாறி மாறி இடம்பெற்ற ஒரு அரசியல் தலைவராகத்தான் அறியப்பட்டிருக்கிறார்.
ஆம், பல பரபரப்பான பேச்சுக்களை பொது மேடைகளில் பேசியிருக்கிற நாஞ்சில் சம்பத்தின் இந்த விலகலான முடிவும் அதேவிதமான பரபரப்பை எழுப்பியிருக்கிறது.