செய்தி :
தேர்தல் ஆணைய விவகாரத்தில் சமூகத்திற்கு தவறான தகவலை தருகிறார் ராகுல்காந்தி.
– மத்தியமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட் :
ஈவிஎம் என்று சொல்லப்படுகிற வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்து பல ஆண்டுகளாகிவிட்டன.
இருந்தாலும், மிக அண்மைக் காலத்தில்தான் தேர்தல் ஆணையம் குறித்தும் தேர்தலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்தும் சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.
அதை மையமாக வைத்து டெல்லியில் கரப்பான் பூச்சி மக்கள் இயக்கம் பெரும் போராட்டத்தையே நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.
நாடு முழுக்க தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
இவர்களெல்லாம் தராத தகவலையா ராகுல்காந்தி தந்துவிடப் போகிறார்?
தேர்தல் ஆணையத்திற்காக பரிந்து பேசுகிறவர்கள் முதலில் தேர்தல் ஆணையத்தை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக நிலை நிறுத்தட்டும்.
பிறகு யாரையும் குற்றம் சொல்லலாம்.