மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த தொகுதிகள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன.
அதிலும் தமிழக முதல்வரான விஜய் மதுராந்தகத்திற்கு சென்று அங்கு பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தபிறகு ஊடகங்கள் எல்லாம் படு சுறுசுறுப்பாகி,
இடைத்தேர்தலின்போது தன்னை நோக்கி எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பன்ச் டயலாக் பாணியில் சூடாக பதிலளித்திருந்தார் விஜய்.
குறிப்பாக பாஜகவைப் பற்றி பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டபோதும் முதல்வர் விஜய் குறிப்பிட்ட மாதிரியே ஆபாச நதியின் ஓட்டத்தை அவரது பேச்சிற்கிடையே காண முடிந்தது.
“பீச்சை பார்த்தால்தான் மூடு வருகிறது” என்கிற ரீதியாக அவர் பேசிய பேச்சு திமுகவின் சில நூறு தொண்டர்களுக்கு வேண்டுமானால் பிடித்தமானதாக இருந்திருக்கலாம்.
ஆனால், இத்தகைய பேச்சுக்களை பரவலான வாக்காளர்கள் அதிலும் பெண் வாக்காளர்கள் ரசிக்கிறார்களா என்று பார்த்தால், உதயநிதியின் பேச்சு திமுகவிற்கு எதிரானதாகவே அமைந்துவிடுகிறது என்பதுதான் யதார்த்தம்.
அதைப்போலவே தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைப் பற்றி மிகவும் ஆபாசமாக, திமுக எம்எல்ஏ ஒருவரே பேச, அதை மேடையிலிருந்த உதயநிதி ஸ்டாலின் ரசித்துக் கொண்டாடியதெல்லாம், சரியான திராவிட மாடலை நினைவுபடுத்துகிற மாதிரி இல்லை.
அதிமுக தரப்பிலும் பணப்பட்டி கைமாறியிருச்சு என்கின்ற ஒற்றை முழக்கத்தையே தன்னுடைய பேச்சின் ஊடாக விவரித்து எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் அதற்கு தொகுதி மக்களிடையே அவர் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.
பொதுவுடைமைக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளின் பிரச்சாரம் வலுவானதாக வாக்காளர்களால் உணரப்படவில்லை.
இந்த நிலையில், பல்வேறு விமர்சனங்களை மீறி பிரச்சாரத்திலும், செயல்பாட்டிலும் முன்னிலையில் இருப்பது தவெக தான்.
இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட உத்திகளே போதுமானவை.
1. பெரிதும் ஈர்க்கப்பட்ட முதல்வர் விஜய்யின் பரப்புரை.
2. இடைத்தேர்தலுக்கு சற்று முன்னர் வெளியாகி பெரும பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை.
3. மதுரையில் முதல்வர் துவக்கி வைத்திருக்கிற தாய்மாமன் சீர் என்கிற அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் என்கிற செயல்திட்டம்.
4. இதையடுத்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற மகளிருக்கு தமிழ்நாடு முழுவதும் பயணிக்க அரசுப் பேருந்துகளில் இலவச அனுமதி என்கின்ற செயல்திட்டம்.
அக்டோபர் 6-ம் தேதி இவற்றின் தாக்கத்தை உணர வாய்ப்பிருக்கிறது.
– தமிழ்மாறன்