செய்தி :
மகளிர் உரிமைத் தொகையாக 2500 ரூபாய் யாருக்காவது வந்திருக்கிறதா?
– தவெக தேர்தல் வாக்குறுதியைக் குறிப்பிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி.
கோவிந்த் கமெண்ட் :
தவெக அரசு ஆட்சிப்பொறுப் பேற்ற 4 மாதங்களுக்குள் 2500 ரூபாய் வந்துவிட்டதா என்று கேட்கும் இதே பிரேமலதா விஜயகாந்த் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எத்தகைய பேச்சுக்களையெல்லாம் பேசியிருக்கிறார்.
திமுக நிறைவேற்றாத பல வாக்குறுதிகளைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசியிருக்கிற அதே பிரேமலதாதான் தற்போது, அதே திமுக கூட்டணியில் சேர்ந்து தவெகவைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் அல்லது கேள்வி எழுப்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரேமலதா நேற்று பேசியதை மறந்து போகலாம். ஆனால், பொதுமக்கள் எதையும் சுலபமாக மறந்து விடமாட்டார்கள்.