மனிதனின் முதல் விஞ்ஞானம்; முதல் கலை; முதல் ரசனை!

வாசிப்பின் ருசி :

“வயிற்றுப் பசி, வம்ச விருத்தி என்ற இரண்டு உணர்ச்சிகளும் தீர்ந்த பிறகு, இருக்கும் பொழுதில் மனிதனால் சும்மா இருக்க முடியாது. குறைந்தபட்சம் அவன் சிந்தித்தான் அல்லது கனவு கண்டான்.

இந்தச் ‘சும்மாயிருக்க முடியாமை’ என்ற ஒரு குணத்தில் தான் மனிதனின் பெருமையே அடங்கிக் கிடக்கிறது.

அந்த முதல் மனிதன் ஒரு கல்லை எடுத்துத் தீட்டி அது கூர்மையாவது கண்டு குதூகலித்தானே – அதுதான் முதல் விஞ்ஞானம்; முதல் கலை.

அந்தக் குதூகலம்தான் முதல் கலா ரசனை. அந்தச் செயல் அத்துடன் நின்றுவிடவில்லை. அதன் தொடர்ச்சியே இன்றைய சகல, மனித சாதனைகளும்!”

  • எழுத்தாளர் ஜெயகாந்தன்
Comments (0)
Add Comment