ஜெயகாந்தனை நாவல் எழுதத் தூண்டிய வீரப்பன்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் ஏ.வீரப்பன்.
 
இவர் ஆரம்பகால கட்டத்தில் நாகேசுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தவர்.
 
ஆனால், அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் கவுண்டமணி செந்தில் இருவருக்கும் நகைச்சுவைக் காட்சியை எழுதிக் கொடுக்கக் கூடியவராக இருந்தார்.
 
மிகவும் பிரபலமான கவுண்டமணி செந்தில் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் வீரப்பனால் எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டவை.
 
இது திரைத்துறையினர் பலருக்கும் தெரிந்த விஷயம் என்றால் கூட, பொதுவெளியில் இருப்பவர்களுக்கு வீரப்பன் இதன் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வராது.
 
மறையும் வரை பல்வேறு காட்சிகளுக்கான கருத்துக்களையும் அதற்கான வசனங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்த வீரப்பன், எழுத்தாளரான ஜெயகாந்தனுக்கு உதவி இருப்பதை, ஜெயகாந்தனே ஒரு மேடைப் பேச்சில் இப்படிச் சொல்லி இருக்கிறார்.
 
“நான் எழுதிய ‘யாருக்காக அழுதான்’ என்கிற நாவலில் வரும் கதாபாத்திரம் விசித்திரமானது.
 
அந்தக் கதாபாத்திரம் கடைசியில் பல நெருக்கடிகளைச் சந்தித்து, அந்த நெருக்கடியின் அழுத்தம் காரணமாக கடைசியில் வாய்விட்டு கதறி அழுகிற மாதிரி நிறைவடைந்திருக்கும்.
 
உண்மையாகவே இந்த அனுபவத்தைப் பெற்றவரான நடிகர் வீரப்பன் தான் இந்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். அதைத்தான் நான் யாருக்காக நாவலாக எழுதினேன்.
 
ஆனால், இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்து தான் தாங்க முடியாமல் அழுத அனுபவத்தை வீரப்பன் என்னிடம் சொல்லும்போது சிரித்துக் கொண்டே சொன்னார். அதுதான் விசித்திரம்” என்றார்.
 
– அ. தமிழரசன்
Comments (0)
Add Comment