செய்தி :
தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, ”பாம்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதி வேண்டும்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேட்டார்.
அப்போது, முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், “பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது.
ஆக, அந்தத் தொகுதியெல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன்.
அதனால் நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால், அதை நடத்திக் காட்ட வேண்டும்.” என்றார்.
கோவிந்த் கமெண்ட்:
இதே சட்டமன்றத்தில் ஒரு காலத்தில் முதலமைச்சராக அமர்ந்திருந்திருக்கிற ஓபிஎஸ் தற்போது திமுகவில் இருக்கும் நிலையில், அவர் தன்னைத்தானே ஒரு ஜோக்கரைப் போல ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
அதனால்தான் திமுகவிலிருந்து கொண்டு நாகதோஷம் கழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்திலேயே முன்வைக்க அது பெரும் சிரிப்பை சட்டமன்றத்தில் வரவழைத்திருக்கிறது.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “அறிவியல் பூர்வமற்ற ஒன்றை எல்லாம் அரசால் செய்ய முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்றபடி நீங்கள் நாகதோஷம் கழித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டியதாயிற்று.
முன்னாள் நகைச்சுவை நடிகரான விவேக் ஒரு படத்தில், “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?” என்று சொல்லியிருப்பார்.
அவர் அன்று சொன்ன அந்த டயலாக் இப்போது ஓபிஎஸ்க்கு செம்மையாக பொருந்துகிறது.