செய்தி :
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல போலி வீடியோ!
– மோசடி நபர்கள் பற்றி சிபிசிஐடி அதிரடி விசாரணை.
கோவிந்த் கமெண்ட் :
தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது, தவெக தரப்பிலும் சரி, திமுக தரப்பிலும் சமயங்களில் பாஜக தரப்பிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி சில பிரம்மைகளை உண்மைபோல கட்டமைப்பது நடக்கிறது.
அதில், பல முக்கிய பிரமுகர்களைப் பேச வைப்பது மாதிரியான தொழில்நுட்பத்தை கையாளுகிறார்கள்.
முன்பு பிரதமர் மோடியை பற்றியும் இதே மாதிரியான ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.
இப்போது தமிழக முதல்வரான விஜய்க்கும் இதே மாதிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் பேசுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை செல்போன்கள் சமூக வலைத்தளங்களில் வழியாகவும் பரப்புகிறார்கள்.
இதையெல்லாம் சைபர் கிரைம் துறையினர் தான் மோப்பம் பிடிக்க வேண்டும்.