எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ!

இளவரசுக்கு நாகேஷ் சொன்ன அறிவுரை

பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நடிகர் நாகேஷ் செய்த அட்வைஸ்.

இளவரசுவின் கேள்வி: ‘இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு’ என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாகேஷின் பதில்: இல்லை இது தவறு. திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற கேரக்டர்கள் எல்லாம் என்னை எங்கேயோ கொண்டு போயின. அதெல்லாம் இறந்த காலம்.

இப்போதெல்லாம் எனக்கு வேலையே இல்லை. ஆனால் நீயோ மாதத்துக்கு 15 நாட்களாவது ஷூட்டிங் சென்றுவிடுகிறாய். இப்போதைக்கு நீதான் என்னைவிட பெரிய நடிகன்.

அப்படி இருக்கையில் நான் அப்போது பெரிய நடிகனாக இருந்தேன் என்ற நினைப்பில் இருந்தால், உன்னை மதித்து நான் பேசுவேனா?

அதனால் எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ. இறந்தகாலத்தை ஏன் பார்க்குற. அதுதான் இறந்துவிட்டதே”.

Comments (0)
Add Comment