உடம்பு உங்களுக்கு என்ன சொந்தம்?

குருவுக்கு முன் சீடர்கள் அமர்ந்திருந்தார்கள்.

சற்றே தியானித்த பிறகு குரு தீர்க்கமாகச் சொன்னார் – “நம்முடைய உடல் நம் உடன்பிறப்பைப் போல. அத்தைகைய உடலை நாம் எந்த விதத்திலும் பாழ்படுத்தி விடக்க்கூடாது.

அந்த உடலுடன் இயல்பான நட்புடன் இருக்க வேண்டும். அந்த உடல் சொல்லும் மொழியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு போனபோது, எதிரே அமர்ந்திருந்த சீடர் ஒருவர் கேட்டார்.

“உடலை நம்முடன் பிறந்த சகோதர, சகோதரியைப் போல என்று சொல்கிறீர்களே, உடம்பு  மூத்த உடன்பிறப்பா அல்லது இளைய உடன்பிறப்பா?”

அந்தக் கேள்விக்கு மென்மையானபடி பதிலளித்தார் குரு. 

“உடல்தான் முதலில் பிறக்கிறது. அதிலிருந்து தான் படிப்படியாக மனமும் அதற்கான எண்ணங்களும் கிளை விடுகின்றன.

ஆகவே, உடலை மூத்த சகோதர, சகோதரியைப் போலக் கருத வேண்டும். அதனால் தான் சொல்கிறேன் உங்களுக்குள் இருக்கிற மூத்தோருக்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள்”

அமையானார் அந்த சீடர். 

Comments (0)
Add Comment