இன்னும் நீதான் எனது நம்பிக்கை…!

வாசிப்பின் ருசி :

உன் பாடல்களை நீயே எழுது.
உன் கோஷங்களை
நீயே நிர்ணயம் செய்.

மேலே கூடுகளைச் சுமக்கிறவரை
நீ நத்தையாகத்தானிருப்பாய்.

கூட்டைக் கழற்றியெறி
எறியும் போது
செத்துப் போனால் போ.
பரவாயில்லை.

உன் அடுத்த தலைமுறை
வேகமாக இந்தப் புற்களிடையே
நடக்க வேண்டும்.

இன்னும் நீதான்
எனது நம்பிக்கை.

– எழுத்தாளர் வண்ணதாசன்

Comments (0)
Add Comment