திறமையாளரைப் போற்றிய பண்பாளர்!

அருமை நிழல்:

திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன.

புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார்.

நாடகமாக வெற்றி பெற்ற ‘வேலைக்காரி’யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர். வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர்.

25-2-1949-ல் வெளியான வேலைக்காரி பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

குறிப்பு – நடிப்பிசைப் புலவர் என்று போற்றப்பட்ட கே.ஆர்.ராமசாமி பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக் கூறியபோது எடுக்கப்பட்ட படம். அருகில் இயக்குநர் ப.நீலகண்டன்.

  • தகவல் : தமிழ் மின் நூலகம்
Comments (0)
Add Comment