அனிதா ராதாகிருஷ்ணன் கைது: உணர்த்துவது என்ன?

தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே ஊடகங்களிலும் பொதுவெளியிலும் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

“திமுக முன்னாள் அமைச்சர்களை எப்போது கைது செய்யப் போகிறார்கள்?“

திமுக தரப்பில் இதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு விதமான முன்னெடுப்புகள் தொடர்ந்து நடந்தாலும், சில முன்னாள் அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் நடந்தாலும், “அடுத்தகட்டமாக தவெக என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி“ தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.

தற்போது, திமுக முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தவெக முதலமைச்சரான விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக அண்மையில்தான் அவர்மீது காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

அதையடுத்து, நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமினுக்கு முயற்சிப் பண்ணிக் கொண்டிருந்தநிலையில், அந்த முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்தே கைது செய்யப்பட்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.

இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் குறித்து அவர் காட்டமாக பேசியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த கூட்டத்தில், படு ஆவேசமாக பேசிய அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, “கரூர் கணக்கு வழக்கைத் தீர்க்க வேண்டியிருக்கிறது” என்று பொடி வைத்துப் பேசியிருந்தார்.

முன்னாள் திமுக அமைச்சரான ரகுபதியும், “செந்தில் பாலாஜி மீது  நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி நடக்கிறது” என்று பேட்டியளித்திருந்தார். 

ஏற்கனவே, தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சரான சேகர் பாபு மீது பதியப்பட்ட புகார் அப்படியே இருக்கிறது.

அதைப்போலவே முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு வீட்டிலும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்து அதுவும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு கைது விஷயத்தில், முதலில் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கியிருக்கிறார்.

Comments (0)
Add Comment