நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நவசமாஜ் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மகளிர் மேடையின் நிர்வாக தலைவர், எழுத்தாளர், மேனாள் அரசு துணைச் செயலாளர் (தலைமைச் செயலகம்) இரா. கலைச்செல்வி தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் சட்டமன்ற கூடுதல் செயலாளர் திருமதி. தேன்மொழி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் இவ்வருடம் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
முக்கியப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருதும், சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
விழாவில், நவசமாஜ் மகளிர் மேடை நிர்வாகிகள் சபிதா, புவனேஸ்வரி, லலிதா லட்சுமி, சந்திரமோனி, பிச்சைமணி, செல்வி ராஜாமோகன், சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதோடு, நவசமாஜ் மாநிலத் தலைவர் டாக்டர் போராசிரியர் அன்பானந்தம், மாநிலச் செயலாளர் பன்வார், மாநில அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு மற்றும் மாநிலச் செய்தி தொடர்பாளர் கே.என்.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.