அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!

நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும்.

கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம்.

ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும்.

ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்.

இவைதான் என் கதைகளின் கருத்து நிலை என்றும் சொல்லலாம்.

– எழுத்தாளர் அகிலன்.

Comments (0)
Add Comment