மின்சாரப் பற்றாக்குறை – கருகும் பயிர்கள் – கவலையில் விவசாயிகள்!

மும்முனை மின்சாரம் (Three Phase Power) முறையாக வழங்கப்படாததால், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பம்ப் செட்கள் இயங்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

தற்போதைய குறுவை சாகுபடி காலத்தில் இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

மேட்டூர் அணை திறப்பு தாமதமாகும் சூழ்நிலை மற்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக சமீப நாட்களாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை நீரை நம்பியுள்ள காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் போதிய நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் வாடி வருகின்றன.

நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மற்றும் அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களே இந்த பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார விநியோகத்தை சீரமைக்கவும், விவசாயத்திற்கு தேவையான நீரை உறுதி செய்யவும் அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்முனை மின்சாரம் தொடர்ந்து கிடைக்காததால் பம்ப் செட்கள் இயங்கவில்லை.

மேலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான பாசன நீர் திறப்பு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் நெற்பயிர்கள் கருகுகின்றன.

விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசன நீர் எடுக்க மும்முனை மின்சாரத்தை நம்பியுள்ளனர்.

ஆனால், மின்சாரம் கிடைக்காததால் மோட்டார்கள் இயங்கவில்லை.

இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் உலர்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சு. சுரேகா

Comments (0)
Add Comment