கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்!

மக்கள் திலகத்தின் அன்றைய பாட்டு அதிமுக தொண்டர்களின் கவனத்திற்கு…!

ஸ்ரீதர் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த உரிமைக்குரல் திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதி, டி.எம்.செளந்தரராஜன் பாடி புகழ்பெற்ற இந்தப் பாடல் இன்றைய அதிமுக சூழலுக்கு மிகவும் பொருத்தமானது.

ஆனால், மீண்டும் பிணைப்புக்கான நெகிழ்வை உண்டாக்க வேண்டியவர்கள் யார் என்பதுதான் கேள்வி.

இதோ அந்தப் பாடல்…

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்

(ஒரு தாய் )

உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்

(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்

(ஒரு தாய் )

Comments (0)
Add Comment