தவெகவில் மட்டுமா குதிரை பேரம் நடக்கிறது?

செய்தி:

தவெகவின் குதிரை பேரம் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை நடத்தக் கேட்போம்!

– அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி.

கோவிந்த் கமெண்ட்:

அதிமுகவின் எடப்பாடி அணியில் இருந்தவரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இத்தகைய கருத்தை சொல்லியிருக்கிறார்.

ஆனால், தற்போது அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் மேல்மட்ட நிர்வாகிகள் தவெகவுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில், இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பதற்கு காரணம் என்ன பேரம் என்பதெல்லாம் தற்போதுள்ள நிலையில் சொல்லிவிட முடியாது.

ஆனால், அதேசமயம் மிக அண்மையில் இதே அதிமுகவின் எடப்பாடி அணி திமுக தலைமையுடன் பேசியதாக பலதரப்பில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் ஏதாவது பேரம் இருந்திருக்கிறதா என்பதையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் வெளிப்படுத்தினால் நல்லது.

Comments (0)
Add Comment