கட்சிவிட்டு கட்சியோ அல்லது அணியோ மாறிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் துக்ளக் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெவ்வேறு கட்சியின் பேச்சாளர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன்.
அதில், மதுரையில் ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாக இருந்தவரான ஜான் மோசஸ் தன்னுடைய கட்சியின் செயல்பாட்டைப் பற்றி பெருமை பொங்க இப்படிச் சொன்னார்:
“எங்கக் கட்சியில – யாரும் வந்தா வந்த மாட்டை கட்ட மாட்டான், போன மாட்டை தேட மாட்டான்”.
ஜான் மோசஸ் சொன்னது அன்றைய சூழலுக்கு மட்டுமல்ல, இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகத் தான் இருக்கும் போலிருக்கிறது.
– மணா