மக்கள் எவ்வளவு சுமையைத்தான் தாங்குவார்கள்?

செய்தி:

இந்தியக் கப்பல் மீது ஈரான் பயங்கர தாக்குதல், ஓமன் கடற்பகுதியில் மூழ்கடிப்பு: மத்திய அரசு கடும் கண்டனம்.

கோவிந்த் கமெண்ட்:

கடந்த 2 மாதங்களுக்குமேல் நீடித்துவரும் மேற்காசியப் போர் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் வழிவிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது நிலைமை முற்றி இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் நிலை வரை வந்திருக்கிறது.

மிக அண்மையில் தான் பிரதமர் மோடி எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும், கொரோனோ காலத்திய நிலை மாதிரி வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்பதை சூசகமாக சொல்லியிருந்தார்.

தற்போது, இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில், இந்தியாவைப் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் எவ்வளவு பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எங்கோ போர் நடக்க அதன் விளைவு எங்கெங்கோ தாக்குகிறது என்றால், சராசரி மக்கள் என்னதான் செய்வது?

Comments (0)
Add Comment