செய்தி:
ஹார்மூஸ் நீரிணையில் ஈரானியப் படகுகளை சுட்டு வீழ்த்துங்கள்!
– அமெரிக்கப் படைகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே, ஹார்மூஸ் நீரிணையில் அண்மையில் இரண்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலினால், உண்டான விளைவை ஏற்கனவே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மூர் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை இந்தப் பற்றாக்குறை எதிரொலிக்கிற நிலையில், மேற்கொண்டு போரில் தீப்பந்தத்தைப் பற்ற வைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது ட்ரம்பின் பேச்சு.