திமுக அரசின் முறைகேடு பற்றி மத்திய அமைச்சர் புகார்!

செய்தி:

உட்கட்டமைப்பு அடிப்படை வசதிக்கு பயன்படுத்தாமல் மத்திய அரசு வழங்கிய நிதியில் திமுக அரசு முறைகேடு செய்துள்ளது!

மத்தியமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு.

கோவிந்த் கமெண்ட்:

உட்கட்டமைப்பு அடிப்படை வசதிக்கு பயன்படுத்தாமல் மத்திய அரசு வழங்கிய நிதியில் திமுக அரசு முறைக்கேடு செய்துள்ளது.

மத்தியமைச்சர் பியூஷ் கோயல் திமுக அரசின் முறைகேடு பற்றி தற்போது சொல்கிறார். இதற்கும் முன்பு தமிழகத்திற்கு வந்தபோது பிரதமர் மோடியும் சொல்லியிருக்கிறார்.

அதற்கு முன்பு பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை திமுக பைல்ஸ் என்ற ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக ஆளுநரிடமும்  நேரடியாக புகார் அளித்திருக்கிறார்.

இப்படிப் பல குற்றச்சாட்டுகள் பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்டாலும், மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வைக்கும் நீங்கள் என்ன முறையான நடவடிக்கை எடுத்தீர்கள்?

அப்படி முறையான நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே புகார் சொல்லிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது?

Comments (0)
Add Comment